நாடு முழுவதும் கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என அழைக்கப்படும் - மத்திய அரசு


நாடு முழுவதும் கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என அழைக்கப்படும் - மத்திய அரசு
x
தினத்தந்தி 30 Nov 2025 11:22 AM IST (Updated: 30 Nov 2025 11:29 AM IST)
t-max-icont-min-icon

ராஜ் பவனின் பெயர், லோக் பவன் என மாற்றம் செய்யப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவர்னர் ரவி, ராஜ் பவன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கையாக முன்வைத்து பேசினார். இந்த பெயர் காலனி ஆதிக்கத்தின் கீழ் நாடு இருந்தது என நினைவூட்டும் வகையில் உள்ளது என பேசினார்.

இந்நிலையில் ராஜ் பவன், லோக் பவன் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி, கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என அழைக்கப்படும். இது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த கவர்னர் மாநாட்டில் கவர்னர் ரவி முன் வைத்த கோரிக்கையின் பெயரில் இந்த பெயர் மாற்றம் அமைந்துள்ளது என்றும் இதனை வரவேற்கிறோம் என்றும் தமிழக கவர்னர் ரவியின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் கூறியுள்ளார். கவர்னர் மாளிகை வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றும் அவர் கூறினார்.

1 More update

Next Story