கவர்னர் தேநீர் விருந்து - விஜய் புறக்கணிப்பு?


கவர்னர் தேநீர் விருந்து - விஜய் புறக்கணிப்பு?
x
தினத்தந்தி 26 Jan 2025 11:16 AM IST (Updated: 26 Jan 2025 1:07 PM IST)
t-max-icont-min-icon

ராஜ்பவனில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.

சென்னை,

இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி, குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது.

இதனால் கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மேலும் அதிமுக, மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story