சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்
x

கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் இருந்த இளைஞர் ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, சூட்கேஷில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் 971 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 971 கிராம் போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தலின் பின்னணியில் இருக்கும் கும்பல் யார்? என சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் சென்னை விமான நிலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

1 More update

Next Story