சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

போதைப்பொருள் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, சென்னையை சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து உயர்ரக கஞ்சா போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தி வந்த பயணியை கைது செய்து, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com