குளிர் தாங்காமல் தாம்பத்தியத்துக்கு அழைத்த கணவன்; மறுத்த மனைவி... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு வந்த கட்டிட தொழிலாளி, ஊட்டி குளிர் என்னை வாட்டி வதைக்கிறது என்று கூறியுள்ளார்.
ஊட்டி,
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் 50 வயது நபர். இவர் திருமணத்திற்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் கட்டிட தொழிலாளியாகவும், 45 வயதான அவரது மனைவி காட்டேஜிலும் பணிபுரிந்து வந்தனர்.
இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 17 வயதாகிறது. 2 மகன்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்கிடையே இளைய மகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் வேலைக்கு செல்வதால், 17 சிறுமி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனது சகோதரியை வீட்டில் இருந்து கவனித்து வந்தார்.
இந்தநிலையில் தொழிலாளியின் மனைவிக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. பணி முடிந்து ஆசையுடன் வீட்டுக்கு வரும் தொழிலாளி , தனது மனைவியை தாம்பத்தியத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. வயது மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி சில நாட்களாக அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு வந்த தொழிலாளி, ஊட்டி குளிர் என்னை வாட்டி வதைக்கிறது. என்னால் ஊட்டி குளிர் தாங்க முடியவில்லை தனது மூத்த மகளிடம் சென்று உன் தாய்க்கு வயதாகி விட்டதால் என்னுடன் தாம்பத்தியத்திற்கு வர முடியவில்லை என கூறி சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, பயிரை காக்க வேண்டிய வேலியே இப்படி நடந்து கொண்டதை நினைத்து கண்ணீர் விட்டு அழுததுடன், தனது தாயிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஊட்டி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்போில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






