‘தி.மு.க.வுக்காக நான் பிரசாரம் செய்வேன்’ - மன்சூர் அலிகான்

தமிழகத்தில் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
‘தி.மு.க.வுக்காக நான் பிரசாரம் செய்வேன்’ - மன்சூர் அலிகான்
Published on

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் 2024 மக்களவை தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட்டார். அப்போது அவர் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு இந்த பணிகளை செய்து கொள்ளலாம். ஒரு மாதத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை நடத்துபவர்களால், சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு மாதத்தில் நடத்த முடியாதா? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒழித்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும்.

பா.ஜ.க.வும், அதன் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் பாசிச சக்திகள். அவர்கள் தமிழகத்திற்கு உதவ மாட்டார்கள். தி.மு.க.வை இத்தனை காலம் எதிர்த்த நானே சொல்கிறேன், தமிழகத்தில் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். தேவைப்பட்டால் தி.மு.க.வுக்காக நானே பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com