கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு


கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 2 April 2025 12:04 PM IST (Updated: 2 April 2025 12:43 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பெள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. தாமோதரன், பாலக்கரை பகுதியில் உள்ள புதிய காலனியில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "கோவை மாவட்டத்திற்கு 380 எம்எல்டி தண்ணீர் கொடுத்தாலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக ஒரு சில பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை குடிநீர் வருவதாக கூறி உள்ளார்கள். எனவே, கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மூலம் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதில் அளித்தார்.

1 More update

Next Story