தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.! எந்த மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்..?


தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.! எந்த மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்..?
x
தினத்தந்தி 19 Dec 2025 3:40 PM IST (Updated: 19 Dec 2025 5:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று உள்ளனர். பெரும்பாலான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.

இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன் விபரம் பின்வருமாறு;

வாக்காளர் பட்டியல் (கோவை மாவட்டம்)

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 32,25,198

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 25,74,608

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,50,590

காஞ்சிபுரம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் -14,01,198

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 11,26,924

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6.50 லட்சம் - 2,74,274

கரூர் மாவட்டம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் உள்ள வாக்காளர்கள் - 8,98,362

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 8,18,672

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 79,690

திண்டுக்கல்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 19,34,447

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 16,09,533

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,24,914

தஞ்சாவூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 20,98,561

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,92,058

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,06,593

திருச்சி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 23,68,967

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 20,37,180

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,31,787

நெல்லை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 14,20,334

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,03,368

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,16,966

விழுப்புரம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 17,27,490

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,44,625

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,82,865

அரியலூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,30,890

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,06,522

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 24,368

தருமபுரி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 12,85,432

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,03,917

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 81,515

கடலூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,93,577

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 19,46,759

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,46,818

கிருஷ்ணகிரி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 16,80,626

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,06,077

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,74,549

நாகப்பட்டினம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,67,730

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,10,392

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 57,338

செங்கல்பட்டு:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 27,87,362

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 20,85,491

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 7,01,871

திருப்பூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 24,44,929

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,81,144

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 5,63,785

திருவண்ணாமலை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,21,902

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,70,744

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,51,162

ராணிப்பேட்டை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 10,57,700

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 9,12,543

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,45,157

மதுரை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 27,40,631

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 23,60,157

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,80,474

கள்ளக்குறிச்சி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 11,60,607

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,76,278

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 84,329

சென்னை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 40,04,694

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 25,79,676

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 14,25,018

வேலூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 13,03,030

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,88,005

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,15,025

நீலகிரி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,89,167

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,33,076

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 56,091

தூத்துக்குடி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 14,90,685

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 13,28,158

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,62,527

நாமக்கல்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 14,66,660

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,72,954

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,93,706

சேலம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 30,30,537

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 26,68,108

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,62,429

திருப்பத்தூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 9,99,411

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 8,82,672

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,16,739

திருவள்ளூர்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 35,82,226

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 29,62,449

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,19,777

தேனி:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 11,30,303

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,04,564

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,25,739

சிவகங்கை:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 12,29,933

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,79,105

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,50,828

ராமநாதபுரம்:

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 12,08,690

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,91,326

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,17,364

மயிலாடுதுறை;

எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 7,83,500

எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 7,108,022

நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 75,378


வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story