இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்


இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ்-2 முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க சென்றுள்ளார். சிறுமியை அந்த இளைஞர் கன்னியாகுமரி அழைத்து சென்றுள்ளார். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து 2 பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை மறுநாள் அவரது ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு இளைஞர் தப்பியோடிவிட்டார்.

மறுநாள் மாலை சிறுமி வீட்டிற்கு சோர்வடைந்த நிலையில் வந்தார். அவரிடம் சிறுமியின் தாயார் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறும் தனது தாயிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story