தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு?


தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு?
x
தினத்தந்தி 31 Jan 2025 11:14 AM IST (Updated: 31 Jan 2025 11:21 AM IST)
t-max-icont-min-icon

தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நிர்வாக ரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நியமிக்கப்படும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் 2 அல்லது 3 சட்டசபை தொகுதிகள் பொறுப்பாக ஒதுக்கப்படுகிறது.

தற்போது வரை 2 கட்டமாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பட்டியலிலும் 19 பேர் வீதம் 38 பேர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 3-ம் கட்ட பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் பனையூரில் இன்று காலை நடக்க உள்ளது. இதில் மதுரை, திருச்சி, நெல்லை, கோவை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story