சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி; சீமான்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது.
தி.மு.க. கூட்டணி கள நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. , பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. பா.ம.க. கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. த.வெ.க கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றார்.
இது தொடர்பாக சீமான் கூறியதாவது, தேர்தலில் நான் தனித்துதான் போட்டியிடுவேன். பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி என என்னை ஏன் பிடித்து தள்ளூகிறீர்கள். நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றல் உள்ளது' என்றார்.






