ராமதாசுடனான சந்திப்பை அன்புமணி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது - செல்வப்பெருந்தகை


ராமதாசுடனான சந்திப்பை அன்புமணி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது - செல்வப்பெருந்தகை
x

ராமதாசை நான் சந்தித்ததில் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை,

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துப் பேசினார். இதனை பாமகவின் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், செல்வப்பெருந்தகை இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது;

"சமூக நீதி கொள்கை கொண்டவர்களை காங்கிரஸ் எப்போதுமே மதிக்கும். ராமதாஸ் உடனான எனது சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அதில் எந்த அரசியலும் இல்லை. ராமதாஸை மனிதாபிமான அடிப்படையில் உடல்நலம் விசாரிக்கவே சென்றேன். ராமதாஸை நான் சந்தித்ததில் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸை நான் சந்தித்ததை அன்புமணி அரசியலாக்கியுள்ளது வேதனையைத் தருகிறது." என்றார்.

1 More update

Next Story