களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான்

களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என விஜய் கூறி இருந்தார்.
களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான்
Published on

திருச்சி,

ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது பேசிய விஜய், எதிரிகள் யார் என்பதை அறிவித்துவிட்டுத்தான் களத்திற்கே வந்திருப்பதாகவும், களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது;

கட்சி ஆரம்பித்துவிட்டு, ஈரோடு கிழக்கு மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் நின்றிருக்கலாமே? களத்தில் யார் இருக்கிறார்கள்? அவர் (விஜய்) பேசுவதையெல்லாம் சிரித்துவிட்டு கடக்க வேண்டும். த.வெ.க. வைத்திருக்கும் தலைவர்களுக்காக ஓட்டு இல்லை. அதிமுக-வில் எம்ஜிஆர், திமுக-வில் கருணாநிதி கொடியில் வைத்திருக்கிறார்கள் என்றாலும் ஓட்டு அவர்களுக்காக இல்லை. குடுக்குற நோட்டுக்குத்தான் ஓட்டு. அப்படின்னா காந்தி நோட்டுக்குத்தான் ஓட்டு. களத்திற்கே வராத விஜய், களத்தைப் பற்றி பேசுவது தான் நகைச்சுவை.

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com