ஜனநாயகன் டிரைலர் எழுச்சியாக இருந்தது: செங்கோட்டையன்


ஜனநாயகன் டிரைலர் எழுச்சியாக இருந்தது: செங்கோட்டையன்
x
தினத்தந்தி 4 Jan 2026 10:03 AM IST (Updated: 4 Jan 2026 11:52 AM IST)
t-max-icont-min-icon

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

சென்னை,

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர், விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி பன்ச் வசனங்களுடன் வெளியான ஜனநாயகன் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் டிரைலர் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியதாவது,

ஜனநாயகன் டிரைலர் மிக எழுச்சியாக இருந்தது. பெரிய மாற்றத்தை உருவாக்கும். திரைப்படம் வெளியான் பிறகு மக்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். என தெரிவித்தார்.

1 More update

Next Story