

சேலம் அருகே வேம்படிதாளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (75 வயது). இவர், நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் திடீரென மூதாட்டி காதில் அணிந்திருந்த பவுன் தங்க கம்மலை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம நபர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து மாரியம்மாளின் பேரன் லோகநாதன், கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.