கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு


கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு
x

சின்னசேலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி மற்றும் குரால் பகுதியைச் சுற்றி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் எஸ்.ஐ. தலைமையில் ஒரு குழுவினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நாட்டுத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, மூன்று பேர் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிச் சென்றனர். மற்றொருவர் துப்பாக்கியை தூக்கி வீசிவிட்டு ஓட முயன்றுள்ளார். அப்போது அந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி வேல்முருகன் என்ற வனக்காப்பாளரின் கால் மீது பட்டுள்ளது. இதில் காயமடைந்த வனக்காப்பாளர் வேல்முருகன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பி ஓட முயன்ற அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story