கன்னியாகுமரி: அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து, நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கினர்.
கன்னியாகுமரி: அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் தாடர்புடையவர்களை கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் பேரில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் 5வது குருக்குவீதி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார் (வயது 50), திண்டிவனம், சஞ்சிவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம்இப்ராகிம் மகன் முகமதுஇஸ்மாயில்(51) மற்றும் திண்டிவனம், ஆசிரியர்நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு(42) ஆகியோர் பணி ஆணை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் திண்டிவனம் சென்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com