தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை


தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 2 May 2025 1:03 PM IST (Updated: 2 May 2025 4:44 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை தேரோட்டம் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சாமி புறப்பாடும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் வலம் வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி, வருகிற 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 24-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story