தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றம்

தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் சில முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்படும்/ நிறுத்தப்படும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செயப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக சில ரெயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பாலக்காடு சந்திப்பில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16792) வருகிற டிசம்பர் 14 முதல் ஜனவரி 27 வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்படாது. மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு சந்திப்பு செல்லும் ரெயில் (வண்டி எண்: 16791 ) வருகிற டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும். தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்படாது.
- தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16766) வருகிற டிசம்பர் 20ம் தேதி தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும். தூத்துக்குடி - கோவில்பட்டி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16765) வருகிற 21ம் தேதி அன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்பட்டும்.
- சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12693) வருகிற டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 12694) வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து சென்னைக்கு புறப்படும்.
- மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16236) வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16235) வருகிற டிசம்பர் 21,22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடிக்கு பதிலாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து இந்த ரெயில் மைசூருக்கு புறப்படும்.
- ஓகாவில் இருந்து தூத்துக்குடி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 19568) வருகிற 19ம் தேதி கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 19567) தூத்துக்குடிக்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து ஓகாவிற்கு ரெயில் புறப்படும். தூத்துக்குடி - கோவில்பட்டி இடையே ரெயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






