பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (25.9.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: மங்களநகர், அம்பாள்நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு.
அயப்பாக்கம்: ஐசிஎப் காலனி, செல்லியம்மன்நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு பிரதான சாலை, அத்திப்பட்டு, வானகரம் சாலை, கங்கை சாலை, பாரதி மேட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர்.நகர், வி.ஜி.என். சாந்திநகர், மேல் அயனம்பாக்கம், செட்டி தெரு, விஜயாநகர், பச்சையப்பாநகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்ரஹாரம், தேவிநகர், சின்ன கொலடி, செல்லியம்மன்நகர், ஜோதிநகர், மூன்றுநகர், எழில்நகர், அண்ணனூர்.
கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள்நகர், ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி, கற்பகாம்பாள்நகர், சீனிவாசபுரம், நஜீமா அவென்யூ, ஈசிஆர் பிரதான சாலை, திருவள்ளுவர்நகர், காவேரிநகர், பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார்நகர், கொட்டிவாக்கம் குப்பம், ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் எச்43 to எச் 50 மற்றும் முல்லை எச் 70 முதல் எச் 78 வரையிலான குடியிருப்புகள்.
திருவேற்காடு: அசோக் மெடோஸ், செஞ்சுரியன் அவென்யூ, ஆரோ எலியாஸ், வடநூம்பல், பெருமாளகரம்.
செம்பியம்: கிருஷ்ணமூர்த்தி சாலை, ஜிஎன்டி சாலை, ஏ.பி.அரசு தெரு, அண்ணா சாலை, கண்ணபிரான் கோவில் தெரு, எத்திராஜ் சாலை, கே.வி.டி மருத்துவமனை, சந்திரபிரபு காலனி, தணிகாசலம்நகர், மூலக்கடை, அன்னை சத்யாநகர், வெங்கடேஷ்வராநகர், காவல் குடியிருப்பு, முத்தமிழ்நகர் 5வது முதல் 6வது பிளாக், முருகன் கோவில் தெரு, சந்தோஷ்நகர், பாலாஜிநகர், எமரால்டு தெரு, சில்வர் தெரு, கெனால் சாலை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






