பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னை, ராதாநகர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை (9.5.2025) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ராதாநகர் துணை மின்நிலையம் மற்றும் மின்மாற்றிகளின் பராமரிப்பு மற்றும் பேட்டரிகளின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி பல்லாவரம் பகுதியில் கண்ணன்நகர், ராதாநகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடுகடை சாலை, லக்ஷ்மிநகர், ஜாய்நகர், சாந்திநகர், கணபதிபுரம், ராதாநகர் மெயின் ரோடு, காந்திநகர், சுபாஷ்நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பெரியார்நகர், குறிஞ்சிநகர், செந்தில்நகர், போஸ்டல்நகர், நடேசன்நகர், சோமுநகர். ஏ.ஜி.எஸ்.காலனி, ஓம்சக்திநகர், முத்துசாமிநகர், சோமுநகர், நியூ காலனி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லேன், ஹஸ்தினாபுரம், புருசோத்தமன்நகர், பஜனை கோயில் தெரு, ஜெயின்நகர், எஸ்பிஐ காலனி, கஜலட்சுமிநகர், என்எஸ்ஆர் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






