பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை (13.10.2025, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்: சோழபுரம் பிரதான சாலை, விவேக்நகர், நேருநகர், இந்திராநகர், கணபதிநகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, மருத்துவமனை சாலை, அர்ஜூனாநகர், எம்டிஎச் சாலை.
பல்லாவரம் மேற்கு: சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம், குளங்கள் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி சாலை சிக்னல்.
அலமாதி: வாணியன் சத்திரம், காஞ்சி காமக்கோடிநகர், ராமாபுரம், கள்ளிக்குப்பம், கன்னிகாபுரம், புதுக்குப்பம்.
திருமுல்லைவாயல்: பத்மாவதிநகர், தென்றல்நகர், மூர்த்திநகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார்நகர், முல்லைநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






