மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
x

பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருநெல்வேலி

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையத்தில் நாளை (11.6.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் இடங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அதன்படி திருநெல்வேலி டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத்தெரு, சாமிசன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story