மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
களக்காடு துணை மின் நிலையத்தில் நாளை (8.8.2025, வெள்ளிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
அதன்படி களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






