மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணைமின் நிலையங்களில் நாளை (9.10.2025, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரதவீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரதெரு, பாரதியார்தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்க்கெட், A.P.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேலமாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி. தெரு வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்குதெரு, ராம்நகர் மற்றும் ஊர்உடையான்குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இதேபோல் கொக்கிரகுளம் துணைமின் நிலையத்தில் நாளை (9.10.2025, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விஜயாபதி துணைமின் நிலையத்தில் நாளை (9.10.2025, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






