‘அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்’ - செங்கோட்டையன்


‘அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்’ - செங்கோட்டையன்
x
தினத்தந்தி 15 Sept 2025 9:37 AM IST (Updated: 15 Sept 2025 9:54 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஈரோட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே மனம் திறந்து பேசினேன். தொண்டர்கள், மக்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டிக் காத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். எனவே, மறப்போம், மன்னிப்போம். அ.தி.மு.க. ஒன்றிணையும் விவகாரம் குறித்து புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story