நெல்லை: ஓடும் ரெயிலில் திடீர் புகை - பயணிகள் அலறல்


நெல்லை: ஓடும் ரெயிலில் திடீர் புகை - பயணிகள் அலறல்
x
தினத்தந்தி 19 Nov 2024 2:37 AM IST (Updated: 19 Nov 2024 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை,

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட மும்பை ரெயில், நெல்லை சந்திப்புக்கு வந்தது. பின்னர் பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

நெல்லையை அடுத்த தாழையூத்து ரெயில் நிலையம் அருகில் சென்றபோது ஏ-1 ஏ.சி. பெட்டியின் அடியில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. இதையடுத்து உடனடியாக அந்த ரெயில் தாழையூத்து ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது ரெயில் பெட்டியின் அடியில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்த பயணிகள் அலறியடித்தவாறு அவசரமாக கீழே இறங்கினர்.

இதற்கிடையே ரெயில் கார்டு, சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்தார். அவர் அந்த பெட்டியில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து புகை வெளியேறிய பகுதியில் ரசாயனத்தை பீய்ச்சி அடித்தார். இதனால் சிறிது நேரத்தில் புகை கட்டுக்குள் வந்தது.

ஏற்கனவே பிரேக் பிடித்தபோது சக்கரத்துடன் இணைந்த பிரேக் ரப்பர் பகுதி மீண்டும் விலகாமல் இணைந்திருந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த புகை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப பணியாளர்கள் கோளாறை சரி செய்து மீண்டும் ரெயிலை இயக்கினார்கள். 30 நிமிடங்கள் தாமதத்துக்கு பிறகு ரெயில் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. ஓடும் ரெயிலில் இருந்து திடீரென்று புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story