நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் : காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்கள்

5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி,
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருடம்தோறும் ஆனி மாதம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி. நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 8-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நெல்லை காவல்துறை சில அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. அதன்படி அதிக சத்தங்களை எழுப்பக்கூடிய பீப்பிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ., ஜாதி கயிறு, ஜாதி பெயர் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள், ஜாதி கொடிகள், ஜாதி தலைவர்களின் பெயர்களை சொல்லி கோஷங்கள் எழுப்பினாலோ கடும் நடவடிக்கை. குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
ரத வீதிகளில் மட்டும் 800 போலீசாரை நிறுத்த திட்டம். நான்கு ரத வீதிகளுக்குள்ளும் நுழையும் 22 இடங்களில் போலீசார் கடும் சோதனை செய்ய முடிவு. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். டிரோன் கேமரா மூலம் அனைத்துமே காவல்துறையால் கண்காணிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கை மீறி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






