சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி


சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி
x
தினத்தந்தி 4 Jun 2025 12:55 PM IST (Updated: 4 Jun 2025 3:20 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், விமான போக்குவரத்துக்கு இடையூறாக, பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, "தண்டர் பூம்ஸ்" என்ற இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரையில் பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் கிடைக்காததால், இந்த புதிய முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

1 More update

Next Story