சென்னையில் ‘96’ என்ற புதிய அரசு பஸ் வழித்தடம் தொடக்கம்

சென்னையில் ‘96’ என்ற புதிய அரசு பஸ் வழித்தடத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் ‘96’ என்ற புதிய அரசு பஸ் வழித்தடம் தொடக்கம்
Published on

சென்னை,

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், அடையாறு பேருந்து நிலையம் முதல் தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் வரை புதிய வழித்தடம் எண்: 96-ல் 7 பஸ்கள் சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பள்ளிக்கரணையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகரப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்), பொது மேலாளர் (தெற்கு) மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வழி:-

ஜெயந்தி தியேட்டர், சென்னை ஒன் (ரேடியல் சாலை), காமாட்சி மருத்துவமனை, பள்ளிக்கரணை, கேம்ப் ரோடு. எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம் செக்போஸ்ட், மேடவாக்கம், சந்தோசபுரம், செம்பாக்கம், தாம்பரம் கிழக்கு வழியாக சென்றடையும்.

கால அட்டவணை:-

அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரம்: 04.50, 05.15, 05.40, 06.05, 06.30, 06.55, 07.20, 07.40, 08.05, 08.30, 09.00, 09.35, 10.10, 10.40, 11.05, 11.30, 11.55, 12.20, 12.50, 13.25, 13.55, 14.20, 14.45, 15.10, 15.35, 16.00, 16.30, 17.05, 17.35, 18.00, 18.25, 18.50, 19.15, 19.45, 20.25hrs.

தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரம்: 06.15, 06.35, 07.00, 07.25, 07.55, 08.30, 09.00, 09.20, 09.45, 10.15, 10.45, 11.10, 11.45, 12.15, 12.45, 1310, 13.30, 14.00, 14.25, 15.00, 15.30, 15.55, 16.20, 16.45, 17.10, 17.40, 18.10, 18.45, 19.15, 19.45, 20.20, 20.35, 21.00, 21.30, 22.00hrs.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com