நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
x

போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முன்னெடுக்க உள்ளதாக இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தெரிவித்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகருக்கு புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து நேற்று முன்தினம் முதல் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ள பேச்சிமுத்து, போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை விரைவாக முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

1 More update

Next Story