நீலகிரி: தேயிலை தோட்டத்தில் கரடி உலா - தொழிலாளர்கள் அச்சம்

கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காட்டெருமைகள், கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு தேடி வந்த வண்ணம் உள்ளன. குன்னூர் அருகே குன்னகொம்பை குடியிருப்பு பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அங்குள்ள தேயிலை தோட்டத்தில் கரடி உலா வந்தது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். எனவே, தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story