நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி - வனத்துறையினர் விசாரணை

புலி இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி: கிணற்றில் இறந்து கிடந்த புலி - வனத்துறையினர் விசாரணை
Published on

நீலகிரி ,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அரிதாக காணப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று கீழ்கோத்தகிரி அருகே உள்ள கடசோலை வனப்பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் புலி ஒன்று இறந்து கிடப்பதை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்டனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கீழ் கோத்தகிரி வனச்சரகர் முத்துராஜா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த புலியின் உடலை மீட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு புலியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அதே பகுதியில் எரிக்கப்பட்டது. மேலும் புலி இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com