நீலகிரி: சாலையில் இறந்து கிடந்த காட்டு யானை

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
நீலகிரி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, கரடி என பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தெப்பக்காடு - மசினகுடி சாலையில் இன்று காலை காட்டு யானை இறந்து கிடந்தது. தெப்பக்காடு - மசினகுடி பகுதியில் உள்ள கிராமங்களில் ரேஷன் கடைகளை உடைத்து அரசி உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டுவந்த இந்த காட்டு யானை இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.
யானையின் உடல் சாலையில் கிடந்ததால் தெப்பக்காடு - மசினகுடி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், வனத்துறையினர் யானையின் உடலை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தினர். மேலும், யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






