அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி

ஓமலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் 54ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி எத்தனையோ கட்சி இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அதிமுகவைபோல் எந்த இயக்கத்திற்கும் இப்படிப்பட்ட சோதனைகள் வந்தது கிடையாது. சோதனைகள் எல்லாவற்றையும் முடியத்துதான் மக்கள் செல்வாக்குபெற்ற இயக்கமாக அதிமுக இன்று செயல்பட்டு வருகிறது.
எத்தனை எட்டப்பன்கள், துரோகிகள் நம் இயக்கத்தில் இருந்துகொண்டே நம்மை வீழ்த்த முயற்சித்தார்கள். மக்கள், தொண்டர்கள் துணையோடு அனைத்து துரோகங்களையும் முறியடித்துள்ளோம். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்கவோ... ஆட்டவோ முடியாது. காற்றை எப்படி தடை போட முடியாதோ அதேபோல் அதிமுகவை எவராலும் தடுக்க முடியாது .
என்றார்.






