கரூர் துயர சம்பவத்தில் உடனடியாக யாரையும் குறை சொல்ல முடியாது - நயினார் நாகேந்திரன்


கரூர் துயர சம்பவத்தில் உடனடியாக யாரையும் குறை சொல்ல முடியாது - நயினார் நாகேந்திரன்
x

தவெக கூட்டத்திற்கு தமிழக காவல்துறை சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கரூர்,

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிறந்தோர் மற்றும் காயம் அடைந்தோர்களின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;

“கரூரில் நடந்த துயரச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, உடனடியாக யாரையும் குறை கூற முடியாது. தீவிரமாக விசாரிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.

3 தடவை கரண்ட் கட் பண்ணிருக்காங்க. தவெக கூட்டத்திற்கு தமிழக காவல்துறை சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு எடுக்க வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது.

விஜய் இங்கு இருந்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். மக்களுடன் நின்றிருக்க வேண்டும். நேரில் ஆறுதல் சொல்லாமல் அவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? வெறும் ரூ.20 லட்சம் கொடுத்தால் உயிர் மீண்டும் வருமா?”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story