தஞ்சை மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய விவகாரம் - நர்சு பணிநீக்கம்


தஞ்சை மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய விவகாரம் - நர்சு பணிநீக்கம்
x

நோயாளிகளின் வார்டுகளுக்கு நேரில் சென்று சிகிச்சைகளை வழங்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற வந்த நோயாளிகளை, படுக்கையில் படுக்க வைத்து டிரிப்ஸ் ஏற்றுவதற்கு பதிலாக நர்சு ஒருவர் நோயாளிகளை மருந்து வழங்கும் அறைக்கு வரவழைத்து அவர்களை நிற்கவைத்து டிரிப்ஸ் ஏற்றியது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நர்சு ரஞ்சிதா மீது மருத்துவமனை நிர்வாகம் துறை ரீதியான விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், ரஞ்சிதாவை பணிநீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கு நேரில் சென்று சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும், மாறாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுசுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story