ஓணம் பண்டிகை: சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு


ஓணம் பண்டிகை: சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
x

கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

ஓணம் பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து கொல்லத்திற்கு பிற்பகல் 3.10க்கும் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06119) ஆக்ஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) சென்னையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சென்னைக்கு காலை 10:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்:06120) ஆக்ஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) சென்னையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் பெட்டிகள் அமைப்பு: 15- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது.

1 More update

Next Story