சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி


சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி
x

இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

சென்னை

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்க்கு நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 168 பேர் பயணிக்க இருந்தனர். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி ஓட தயாரானது.

அப்போது, விமானத்தின் அவசர கால கதவி பயணி ஒருவர் திறக்க முயன்றார். விமானத்தின அவசர கால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த குஜராத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 45) என்ற பயணி அவசர கால கதவை திறக்க முயன்றது தெரியவந்தது. இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.

உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி லட்சுமணனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவசர கால கதவை தெரியாமல் திறந்துவிட்டதாக லட்சுமணன் கூறினார். அவரின் விளக்கத்தை ஏற்கமறுத்த அதிகாரிகள் அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். பின்னர், அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் விமானம் சுமார் அரைமணிநேர தாமதத்திற்குப்பின் இலங்கை புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story