புதுக்கோட்டையில் திடீரென சாலையில் இறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


புதுக்கோட்டையில் திடீரென சாலையில் இறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 Nov 2025 1:15 PM IST (Updated: 13 Nov 2025 1:26 PM IST)
t-max-icont-min-icon

விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் மலைமாதா கோவிலுக்கு அருகில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் கீரனூர் சாலையில் விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறிய ரக விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முன்பகுதி சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாலையில் போக்குவரத்து இருந்த நேரத்தில் விமானம் தரையிரங்கியது. நல்வாய்ப்பாக மோதல் தவிர்க்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயிற்சி விமானி இருவர் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற விமானம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story