பிரதமர் வருகை: திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளார்.
திருச்சி,
பிரதமர் மோடி தற்போது பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை முடித்து விட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளார்.
முதலில் தூத்துக்குடி வரும் பிரதமர், அங்கு விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து, அன்று இரவே திருச்சிக்கு வருகிறார். 27ம் தேதி காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story






