கோவை மாணவி விவகாரம்: பகுத்தறிவின்றி நடத்துவதா..? - கனிமொழி எம்.பி. கண்டனம்


கோவை மாணவி விவகாரம்: பகுத்தறிவின்றி நடத்துவதா..? - கனிமொழி எம்.பி. கண்டனம்
x
தினத்தந்தி 10 April 2025 10:51 PM IST (Updated: 10 April 2025 11:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

கனிமொழி எம்.பி. தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கோவை பொள்ளாச்சியில் தனியார் பள்ளி ஒன்றில், பருவம் எய்திய மாணவியை வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பி தரையில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ள செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. அறிவியல் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியைக் கொஞ்சம் கூட பகுத்தறிவின்றி நடத்தியுள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இதில் தொடர்புள்ள ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story