பைக் தடுமாறி விழுந்து துறைமுக தொழிலாளர் பலி


பைக் தடுமாறி விழுந்து துறைமுக தொழிலாளர் பலி
x

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர், இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆவரைகுளம் கிராமம் காலனி தெருவில் வசிப்பவர் முனியசாமி. இவரது மகன் லிங்கராஜ் (வயது 27), தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஓட்டப்பிடாரத்திலிருந்து ஓசனத்து செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story