விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்: பா.ஜ.க. ஆதரவு

சட்டமன்றத்தில் இதைப் பற்றி தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதோடு, கூட்டத்தில் உரையாடுகையில், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசி தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன் எனவும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி அவர்களையும் சந்தித்து விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்வேன் எனவும் உறுதியளித்தேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






