பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x

அம்சவேணி இன்று காலை காலமானார்.

சென்னை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீசின் தாயார் அம்சவேணி (வயது 83). வயது மூப்பு , உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அம்சவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, அம்சவேணி இன்று காலை காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீசின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

1 More update

Next Story