பாகிஸ்தானை, அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி மன்னித்துள்ளார் - அண்ணாமலை

எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது என அண்ணாமலை கூறினார்.
திருப்பூர்,
திருப்பூரில், பா.ஜ.க. சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது.. பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது;
"பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா? போரா? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது."
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






