இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'


இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
x

ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைபெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை வரை பெய்யும் என்பதால் நிர்வாக ரீதியாக அங்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

1 More update

Next Story