100 நாள் வேலை திட்டம் தொடர்பாக நாளை சட்டசபையில் தீர்மானம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


100 நாள் வேலை திட்டம் தொடர்பாக நாளை சட்டசபையில் தீர்மானம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2026 1:59 PM IST (Updated: 22 Jan 2026 2:02 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை கூட்டத்தொடரின்போது, மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. திமுக மாதிரி தேர்தல் வாக்குறுதியை கொடுத்து நாங்கள் ஏமாற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நீங்கள் சொன்ன வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 23 ஆண்டுகால பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளோம். இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு என் அறையிலேயே வந்து இனிப்பு வழங்கினர். அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என வாக்குறுதி கொடுத்தீர்களா இல்லையா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மு.க.ஸ்டாலின், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் தொடர்பாக நாளை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story