சென்னையில் ரெயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உடல்நிலை சரியில்லாமல் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றார்.
சென்னை
திருவேற்காடு, சுந்தரசோழபுரம், தனியார் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இவரது மனைவி செல்வி(58). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக பாபு, உடல்நிலை சரியில்லாமல் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் இருந்து வெளி்யே சென்ற பாபு அதன் பிறகு மாயமானார். இந்த நிலையில் ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற பாபு, அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






