15 வயது சிறுமியுடன் பள்ளி மாணவன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நபர் செய்த அதிர்ச்சி செயல்


15 வயது சிறுமியுடன் பள்ளி மாணவன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய நபர் செய்த அதிர்ச்சி செயல்
x

இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்து வந்த பிளஸ்-1 மாணவர் அவரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியை தனியாக அழைத்துச் சென்ற மாணவர் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது பிச்சைமணி (வயது 32) என்பவர் தனது செல்போனில் அதை படம் பிடித்து மாணவியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.

இதன் காரணமாக சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் தனியார் ஆஸ்பத்திரியில்' சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமடைந்திருந்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது தன்னை 2 பேரும் சீரழித்து விட்டதாக கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவன் மற்றும் பிச்சைமணி ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ்போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

1 More update

Next Story